Sunday 8 January 2012

மனவலியுடன் மருத்துவர்களுக்கு ஒரு மடல்...!!!!

நண்பர்களுக்கு , குறிப்பாக மருத்துவ நண்பர்களுக்கு.....

                           "ஒரு கொலைகார, குடிகார , ஆட்டோ டிரைவர்-ஆல் அநியாயமாக கொலை செய்யப்பட்ட சக மருத்துவர்.சேதுலட்சுமி மரணத்திற்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்... அவரின் குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்.."

                           அவரின் இறப்பு இன்றைய சமுதாயத்தில் மருத்துவர்களின் நிலைமையை என் போன்றோருக்கு உரைக்க எடுத்துரைத்ததில்... மருத்துவர்கள் மீதான பார்வையை புரிந்துகொள்ள உதவிசெய்ததில்... உங்களுக்கும் பேரதிர்ச்சியே மிஞ்சியிருக்கும் என்று நம்புகிறேன்...

                            குடித்துவிட்டு வந்து மருத்துவனை அடித்தால்... குடிகாரன் சுயநினைவுடன் இருக்கிறானாம்... 'குடிகாரனிடம் அடிவாங்கி விட்டு அவனுக்கு சிகிச்சையளிப்பது' மட்டுமே ... நம் பணியாம்... இதற்கும் நியாயம் கற்பிக்கிறது மெத்தப்படித்த மேதாவியின் பத்திரிகை ஒன்று... குடித்துவிட்டு கத்தி எடுத்து உன்னை குத்தினாலும் அவன் சுயநினைவுடன் தான் இருப்பானோ..??

                           விஷம் குடித்து வரும் நோயாளிக்கு(?) Stomach Wash-கொடுக்க Tube போடலாமென்றால்... "பார்த்து Doctor வலிக்காமல் போடுங்கள்" என்பர்... இந்த அக்கறையை வீட்டில் அவனிடம் காட்டியிருந்தால் அவன் விஷம் குடித்திருக்க மாட்டானே..?!

                         ICU-வில் இருக்கிறார்... கூட்டம் போட வேண்டாம் ... கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டுமென்றால்.... ஊரே அங்குதான் கூடும் ... இத்தனை பேர் அவனுக்காக வீட்டில் இருந்திருந்தால் தனிமையின் துயரால் அவன் ஏன் தற்கொலை முடிவிற்கு வரப்போகிறான்...??!

                        பிரசவத்தின்போது non-progress of Labour ஆகலாம்... LSCS தேவைப்படலாம்... பிறந்த குழந்தை HIE போகலாம்... Placenta எடுக்கும்போது PPH போகலாம் ... Blood தேவைப்படலாம்...... இது எல்லாமே NORMAL ... ஒவ்வொரு பிரசவத்தின் போதும் நிகழ 100 % வாய்ப்பிருக்கிறது..... இதில் ஏதோ ஒன்று நிகழ்ந்தாலும், PHC -இல் Delivery Performance கூட்டணும்-ன்னு சொல்ற அதே நபர்தான் Death Audit -ல் உன்னை எதோ கொலை குற்றவாளி போல நிக்க வைத்து கேள்வி கேட்பார்... இதை நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்..??

                       இனி வேண்டுமானால் ஒவ்வொரு PHC -க்கும் ஒரு GYNECOLOGIST, PEADIATRICIAN , ANESTHETIST மற்றும் BLOOD BANK வைத்துவிட்டு நம்மை கேள்வி கேட்கட்டும்..!! அதை பண்ணாமல் நம்மிடம் E.O.I கேட்பார்கள்... 6 மாதம் LSCS or ANESTHESIA TRAINING தருவார்கள்..... ஏன் போக வேண்டும்...? நாளையும் இதேபோல இன்னொரு நிகழ்வு நடக்கும்.... அன்று, உனக்கு தகுதி இல்லை என்பார்கள்... வேண்டுமானால் PG SEAT -ஐ அதிகரிக்கட்டுமே.... வருடத்திற்கு 8000 முதல் 10000 பேர் MBBS மட்டும் முடித்து வெளிவரும்போது... 2000 PG SEAT உடன் , எல்லாரையும் 'MD / MS படிக்கலையா..?? நீங்க "வெறும்"MBBS தான..??' என கேட்க வாய்ப்பிருக்காதே..??!!

                     இங்கு நம்மை வாய்கிழிய திட்டும் பல பரதேசிகளுக்கு ..... Investigations (USG, CT, MRI., etc) மட்டும் இலவசமாய் GH களில்... ஆனால்., Treatment மட்டும் Corporate Hospital களில்... இவர்களைப் போன்ற அரைகுறைகள்தான் Media வாக்கை வேத வாக்காக (அவர்களுக்கு வசதியானால் மட்டும் ) நம்புவார்கள்.....

                     எனது கருத்தின்படி இங்கு 10 வருடத்திற்கு மேல் கிளினிக் நடத்தும் லட்சக்கணக்கான DOCTOR-கள் குறைந்தது 20 வழக்குகளையாவது சந்தித்திருப்பார்கள்..... அதில் மொத்தமே 20 அல்லது 30 வழக்குகளில் மட்டுமே இழப்பீடு வழங்கியிருப்பார்... ஆனால் Media அந்த 20 செய்திகளை மட்டுமே உங்கள் அனைவரிடமும் கொண்டு சேர்த்திருக்கும்...

                    உதாரணமாக, ஒரு கருத்தடை (PS) பண்ணி மறுபடி கருத்தரிப்பது, எந்த வகையில் மருத்துவரின் 'தவறான சிகிச்சை'-ஆக முடியும்... Failure rates are there for every Sterilization Surgery .... ஆனால் அரசு இதற்கு நஷ்ட ஈடு கொடுக்கும்..... MEDIA அதை Doctor-ன் தவறு என எழுதும்..... நாமும் கண்டுகொள்வதில்லை.....

                  ஒரு குழந்தைக்கு போன மாசம் இங்கு "நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை" முதல் முறையாக... அதுவும் வெற்றிகரமாக செய்யப்பட்டது... இந்த செய்தி எத்தை பேருக்கு தெரியும்..?? அட., எத்தனை மருத்துவர்களுக்கு தெரியும்..?? (95 % பேருக்கு தெரியாது என்பதே என் கணிப்பு.. ) ஏனென்றால் நீங்கள் நம்பும் Media அப்படி..!!!!

                 நேற்று ஒரு தொலைக்காட்சியில் "இனியும் இதே போன்ற கொலைகள் தொடரும்....." குற்றமும் பின்னணியும் ..ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு' என்கிறான்... இது சமுதாயத்தின் மிரட்டலா..?? மேல் வர்க்கத்தினர் அதிகம் படிக்கும் அந்த பத்திரிகையில் "தவறான சிகிச்சை"-என்ற தலைப்பில் தலையங்கம் எழுதுகிறான்...!!!!! இன்னும் பல, இதே போன்று......

                  நடந்தது "தவறான சிகிச்சை அல்ல" என்றால்.... அதைச்சொல்ல நீ என்ன விசாரணை கமிஷனா என கேட்கிறான்..... பாவிகளா.... "நான் மருத்துவன்" நான் சொல்வதை நம்ப மறுக்கும் உனக்கு... அந்த பத்திரிக்கை ஆசிரியனை பார்த்தால் , ஒருவேளை, "விசாரணை கமிஷன் தலைமை நீதிபதி"போல தெரிகிறதோ..??

                   உங்களுக்கு லாபம் வேண்டும், அதிகம் விற்பனை ஆக வேண்டுமென்றால் பேசாமல் மஞ்சள் பத்திரிகை விற்கலாமே...?? உன் போன்ற மூடர்களால்தான், இன்று ஒரு உயிர் பறிபோய் உள்ளது என்பதை நீங்கள் உணரும் காலம்தான் எப்போது..?? உங்கள் கடமை அறிந்து எப்போது மக்களுக்கு உண்மையை சொல்லப்போகிறீர்கள்..??

                  மருத்துவ நண்பர்களே, இனி உங்கள் கிளினிக்-களில் Emergency treatment வேண்டாமே, பேசாமல் Refer பண்ணி விடுங்கள்... இதையும் மீறி, "இல்ல, நான் குத்துவாங்கி சாகத் தயார்.."என்றால், தொடருங்கள் உங்கள் சேவையை...

                   குடும்பம், உடல்நலம், தூக்கம், நிம்மதி, சொந்தம், உற்றார் உறவினரின் நல்லது கெட்டது பார்க்காமல் ... OP பார்த்து, ஒருவரிடம் 40 ரூபாய் வாங்கினால்..... 1000 கேள்வி (இதில் பல நம்மை பற்றியது (ஏன் PG படிக்கலையா, உங்க சம்பளம் இவ்வளவுதானா, பேசாம காசு கொடுத்தாவது படிக்கலாமில்ல, என் பையன் மாசத்துக்கு 2 லட்சம் சம்பாதிக்கிறான் தெரியுமா, சிங்கப்பூர் -ல வேலை பாக்குறான் , ஊர் எப்டி இருக்கு தெரியுமா..?), அதற்கும் நீ சிரித்த முகத்துடன் பதில் அளிப்பாய்... அவனுக்கு உன்னை கண்டால் , இப்படித்தான் கொலைவெறி, பொறாமை வரும்...

                     இந்த மானங்கெட்ட பொழப்புக்கு செரைக்குற வேல எவ்ளவோ மேல், ஒரு நாளைக்கு 10 பேருக்கு முடி வெட்டி, 5 பேருக்கு செரைச்சுவிட்டா கூட (80 X 10 & 50 X 5 = 1050) அதிகம் சம்பாதிக்கலாம்..!!! (ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவனது முதலீடைவிட உன் ஒவ்வொரு நோயாளிக்குமான உன் முதலீடு அதிகம்..!! இதை ஏற்க மனமில்லாத கூட்டமிது...)

                     நீ மாசம் முழுதும் Leave இல்லாமல் 12 மணி நேரம் Daily duty பார்த்து ரூ.10,000 சம்பளம் வாங்கினா... உலகம் உன்னை இப்படித்தானே பார்க்கும்..?? இதற்கு ஒரு சித்தாள் வேலைக்கு போனா உடம்புக்காவது நல்லது..!!! 10 -மணிக்கு வேலை ஆரம்பித்து, 11 மணிக்கு ஒரு Cool drink & Snacks .. 1 மணிக்கு மேல் சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம்... மீண்டும் 3 மணிக்கு ஒரு Tea & Snacks ... 5 மணிக்கு முன்னாடி மூட்டை கட்ட ஆரம்பிச்சுடலாம்...!!!! (அவனது உழைப்பைவிட உன் உழைப்பு எவ்வளவு உன்னதமானது , என்பதை யோசிக்காத "மானிடர்கள் இவர்கள்...)

                   கடைசியாக, உங்களிடம் ஓர் வேண்டுகோள்... தயவுசெய்து இந்த அவ தொழில் உங்கள் குழந்தைகளுக்கு வேண்டாமே...!! உங்கள் குழந்தை Medicine pass -ஆகிவிடுமென்ற நம்பிக்கையிருந்தால்... நல்ல company-ல் Place-ஆகி வருடத்திற்கு 60 லட்சம் சம்பாதிக்கும் தகுதி 1000 % அந்தக்குழந்தைக்கு உண்டென்பதை தயவுசெய்து மறக்க வேண்டாம்...!!! ஏனெனில் அவர்களை இந்த உலகம் கண்டுகொள்வதில்லை..!! அவர்களாவது "நிம்மதி" என்றால் என்ன.?" என்பதை அன்பவிக்கட்டுமே...!!! நம் பெற்றோர் செய்த தவறை நாம் செய்யாமல் இருப்போம்..!!
                 நம் தரப்பு நியாயங்களை கேட்க மறுத்து செவிகளை மூடிக்கொண்டுள்ள , இவர்களிடம் எவ்வளவு உரக்க கத்தினாலும் பயனில்லை நண்பர்களே... அதனால் , உங்கள் வேலைகளை "மட்டும்" தொடருங்கள்...!!!!
-நன்றி..!!
மருத்துவர் ஆனதால்
வாழ்க்கையில் பலவற்றை இழந்த,
உன்னை போல் ஒருவன்.
-மரு.ஜான் ஆரோன் பிரபு..!!

(copyrights never reserved, if u like it , just Share with our FRIENDS)